நல்லாட்சி அரசு நாடகத்துக்கு கூட்டமைப்பே காரணம்! வெளுத்து வாங்கிய கஜேந்திரன்

நல்லாட்சி அரசு நாடகத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பே முழுமுதற் காரணம் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கூறியுள்ளார்.
 யாழ் ஊடக அமையத்தில் இன்று அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைகூறியுள்ளார்
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்கலத்தில் ஒரு தமிழ் அரசியல் கைதிகள்கூட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்படவில்லை இன்னிலையில் ரணில் அண்மையில் மூன்று ஆண்டுகளுக்கு தீர்வு பெற்றுத்தரபோகின்றேன் என்று கூறியிருப்பது கூட்டமைப்பினை வெல்லவைப்பதற்கும் ஜக்கியதேசிய கட்சி எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பெற்றுகொள்ளும் நோக்குடனும் இந்த பொய் வாக்குறுதியனை ரணில் வழங்கியுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பிலும் வெளியிட்ட கருத்துக்கள் கானொளியில்.


No comments