மந்திகையில் தாக்குதல்?


பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து நோயாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சியின் துன்னாலை பகுதியில் இடம்பெற்ற தகராறொன்றில் காயமடைந்த ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் நேற்றிரவு 7.20 மணியளவில் வைத்தியசாலைக்குள் அத்துமீறி வந்த சிலர் ஆண்கள் விடுதிக்குள் நுழைந்துள்ளனர்.
இதன்போது அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். வைத்தியசாலை ஊழியர்கள் அதை தடுக்க முற்பட்டபோது, அவர்களுக்கு குறித்த சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட, அவர்கள் வந்து தாக்குதலை தடுக்க முற்பட்டுள்ளனர். எனினும், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான நோயாளி, தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை வைத்தியசாலை பணியாளர்கள், தாதியர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள் வைத்தியசாலையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுதம் ஏந்திய பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தி வைத்தியசாலையினதும், நோயாளர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments