தீர்ப்பில் சிக்கல் இல்லை; வைகோ எம்.பியாவது உறுதி;

மாநிலங்கள் அவைக்கு மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவே போட்டியிடுகிறார் என அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் படி திமுகவுடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி வைகோ மாநிலங்கள்ளவையினுடாக எம்பி ஆக போகிறார்.

இன்று மதிமுக கட்சியின் தலைமையகமான தாயகத்தில்  ஆட்சி மன்றக் குழு, மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது . அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, துணைச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநிலங்களவைத் தேர்தலில் வைகோதான் போட்டியிட வேண்டும் என்று கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.
இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தமிழகத்தில் 2019 ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் த வைகோ வேட்பாளராகப் போட்டியிடுவது என்று கழகத்தின் உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிர்வாகிகள் வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதேவேளை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் வரும் 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், மதிமுகவின் வேட்பாளராக வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். எனினும் இவ்வழக்கின் தீர்ப்பினால் மாநிலங்களவைக்கு வைகோ செல்வதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நம்பிக்கையுடன் சொல்கின்றனர் மதிமுகவினர். எனவே பாராளுமன்றத்தின் புலி என்று வர்ணிக்கப்படும் வைகோ கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின்செல்லவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுதியுள்ளத்க  அரசியல்ஆர்வலர்கள்கூறுகின்றனர்.

No comments