திருகோணமலையில் 16 பேர் கைது!

திருகோணமலை - கல்லடிச்சேனை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் 16 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் 20 முதல் 60 வயதுடையவர்கள். இவர்கள் கிண்ணியாப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

No comments