தன்பாட்டில் பிதற்றுவது சிறீதரனின் வழக்கம்:சுரேஸ்!


கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடைய பேச்சுக்கள் சபையில் எடுத்துக் கொள்ளப்படும் பேச்சுக்கள் இல்லை. அவர் தான் விரும்பும் விடயங்களை அவ்வவ்போது செல்லிவிட்டுச் செல்வார். அவர் என்ன பேசினாலும், அவரின் பேச்சை சபைக்கு எடுத்துக் கொள்ளாமல் இறுதி முடிவுகளை சம்மந்தனும், சுமந்திரனும் எடுப்பார்கள்.இது தான் கூட்டமைப்பினில் வழமையாக நடப்பதொன்றாகுமென சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் இணைத்துக் கொள்வது தொடர்பில் சிறிதரன் எம்பியின் கருத்து தொடர்பில் சுரேஸ் பிரசேமச்சந்திரன் கருத்து வெளியிடுகையில்  சிறிதரனுடைய பேச்சுக்கள் சபையில் எடுத்துக் கொள்ளப்படும் பேச்சுக்கள் இல்லை. அவர் தான் விரும்பும் விடயங்களை அவ்வவ்போது செல்லிவிட்டுச் செல்வார். அவர் என்ன பேசினாலும், அவரின் பேச்சை சபைக்கு எடுத்துக் கொள்ளாமல் இறுதி முடிவுகளை சம்மந்தனும், சுமந்திரனும் எடுப்பார்கள். 

இவ்வாறு இவர்கள் எடுக்கப்படும் முடிவுகள் சிறிதரனுக்கு விரும்பியதாக இருந்ததில்லை. அது பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுகளாக இருந்தாலும் சரி, வெளியில் எடுக்கும் முடிவுகளாக இருந்தாலும் சரி. 

சிறிதரன் தான் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடலாம். ஆனால் அவர் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களால் அவருடைய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதுதான் கேள்வியாக உள்ளது. 

எனவே சிறிதரன் தான் பேசும் விடயங்களை தனது கட்சி தலைமைகளுடன் பேசி அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்த பின்னர் பொது மக்கள் மத்தியில் கருத்து வெளியிட்டால் அது பயனுள்ள கருத்தாக இருக்கும். இல்லாவிட்டால் சிறிதரனின் கருத்துக்கள் ஊடகங்களுக்கான கருத்துக்களாக மட்டும் இருக்குமே தவிர மக்களுக்கு பயனுள்ள அல்லது நடைமுறையில் வரக்கூடிய கருத்துக்களாக இருக்காது எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments