அமெரிக்க எதிர்ப்பையும் மீறி எஸ்-400 ஏவுகணைகள் வந்து சேர்ந்தன!

ரஷ்யாவிடம்  துருக்கி செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி S-400 ஏவுகணைகள் துருக்கியை வந்தடைந்துள்ளது.

துருக்கியின் வான் பரப்பு பாதுகாக்கும் நோக்கோடு இந்த அதிநவீன ஏவுகணைகளை வாங்கியுள்ளது.

நேட்டோவில் அங்கம் வகிக்கும் துருக்கி இந்த ஏவுகணைகளை வாங்கக்கூடாது என அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இக்கொள்வனவை துருக்கி 
மேற்கொண்டுமேற்கொண்டுள்ளது.

 F-35 ரக போர் விமானம் தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். துருக்கி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜூலை 31-ம் தேதிவரை கெடு விதித்திருந்தார்.


F-35 ரக போர் விமானம் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிக்காக அமெரிக்கா வந்துள்ள துருக்கி நாட்டு விமானிகளை அதற்கு மேல்  எங்கள் நாட்டில் தங்கவிட மாட்டோம் எனவும் அவர் எச்சரித்திருந்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளின்மீது விதிக்கப்படும் பொருளாதார தடை துருக்கி மீதும் திணிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு குறிப்பிட்டிருந்தது நினைவூட்டத்தக்கது.




No comments