கூகிள், முகநூலுக்கு 3% வரி விதிப்பு! கடுப்பில் அமேரிக்கா!

கூகிள், முகநூல் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு 3 விழுக்காடு வரி விதிக்கும் சட்டமூலத்தை பிரெஞ்ச் செனற் அங்கீகரித்துள்ளது.

குறித்த நிறுவனங்கள் பிரான்சுக்கு வெளியே தலைமையகம் அமைத்து மிகக் குறைவான வரி செலுத்துகின்றன. அல்லது வரியே செலுத்துவதில்லை இருக்கின்றன என்ற காரணங்களை முன் வைத்து இப்புதிய வரி விதிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் குறைந்தது 25 மில்லியன் யூரோ வருமானம் ஈட்டி, 750 மில்லியன் யூரோவுக்கு மேல் மொத்த வருமானம் ஈட்டும் எந்தவொரு  நிறுவனமும் பிரான்சுக்கு வரி கட்டவேண்டும்.

இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து வரி கணக்கிடப்படும். அதன் மூலம், பிரான்ஸுக்கு இந்த ஆண்டு 400 மில்லியன் யூரோ வருமானம் கிடைக்குமென மதிப்பிடப்படுகிறது.

இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுவரும் அமெரிக்கா பிரான்சின் அண்மை முடிவு குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. 

எனினும் பிரெஞ்சு நிறுவனங்கள் மீது பதிலுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை டிரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments