முடிவுக்கு வந்தது போராட்டம்?
தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறைப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறைப் போராட்டம், நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் சுமார் 26000 ஊழியர்கள் பங்கேற்றதாக, தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
போராட்டம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதால் தபால் ஊழியர்கள் சேவைக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றை இன்றைய தினத்திற்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்வுகள் இதுவரை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment