பொது இடங்களை ஆகிரமித்து வெளியார் அடாவடி!-ம.தமிழத்தேசியன்.

தமிழகத்தின் தொழில், வணிகம், மத்திய அரசு பணி,  அயலார் கையில்  முழுவதுமாக மாறிவிட்ட இந்நிலையில், பர்னிச்சர்  சில்லரை வணிகத்தை முற்றிலுமாக அழிக்க படையெடுத்து இருக்கிறது வட இந்திய கும்பல், தமிழ்நாட்டின் முக்கிய நகரப்பகுதிகளின் புற நகர் பகுதியல் 20 சதுர கி.மீட்டருக்கு 30 பேர் என்ற குழு வீதம் தமிழ்நாட்டின் நகரப்பகுதி முழுவதிலும் முற்றுகையிட்டுள்ளது வட இந்திய கும்பல், தரம் குறைந்த, கவர்சியான மாதிரிகளில் நெகிழி நாற்காழிகளை வட இந்திய தொழிலதிபர்களிடம் இருந்து  மிக மிக குறைவான விலையில் மொத்தமாக வாங்கிகொண்டு தமிழகத்தின் புறநகர் பகுதிகளில் விவசாய தோப்புகளில் 30 அல்லது 40 பேர் கொண்ட குழுவாக குறைந்த வாடகைக்கு, தங்கிகொண்டு, 20 கி.மீ அல்லது 30 கி.மீ தொலைவு வரை தனித்தனியாக பிரிந்து இரு சக்கரவாகனங்களில் நாற்காலிகளை அளவிற்கு மேலாக ஏற்றி கொண்டு தினம் தினம் மக்கள் கூடும் இடங்களில் விற்பனை செய்கின்றனர். இவர்கள் யாரிடமும் அனுமதி வாங்குவது கிடையாது, இவர்களை நம்ம ஊர் கட்சிகாரர்கள் கூட நெருங்குவது கிடையாது, அதிகார போட்டிக்கு போட்டியிடும் கட்சிகாரர்கள், புதிதாக வெளிமாநிலத்தில் இருந்து வந்து வணிகம் செய்கிறானே, நம் வணிகர்கள் என்ன செய்வார்கள் என்ற அக்கறை இல்லை. தமிழகத்தில் சில்லரை பர்னிச்சர் வணிகம் செய்யும்  சங்கங்கள் கூட இந்த ஆபத்தை உணர்ந்ததாக  தெரியவில்லை.
நம்முடைய இரண்டு கேள்விகள் :
1. தமிழக வணிகவரித்துறை (Tamil Nadu Sales Tax Department) இவர்கள் பணி என்ன? தமிழகத்தில் அன்றாடம் செல்லும் சரக்குந்துகளை இரவு பகல் பாரமல் பணி செய்து அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள் சரியான முறையில் வரி கட்டி ரசீது பெறப்பட்டதா என்று கண்கானிக்கும் பொறுப்புள்ள துறை, வட இந்தியர்களின் வறம்பற்ற பொருட்களின் வரி ரசீதுகளை சரிபார்த்ததா? பாரக்கவில்லை என்றே என்ன தோன்றுகிறது. ஒவ்வொறு மார்வாடிகளின் பல கோடி மதிப்பிலான எலக்ட்ரிக் மற்றும் எலக்டரானிக், நெகிழி பர்னிச்சர்களை மிகப்பெரிய அடிக்குமாடி கட்டிடத்தில் குவித்து வைத்து வணிகம் செய்கின்றனர், அதில் போட்டிருக்க கூடிய அதிகப்பட்ட விலை (MRP) நிர்ணயத்திற்கும் அவர்கள் விற்கும் விலைக்கும் மிகப்பெரிய விலை வித்தியாசம் இருக்கிறது. இது எதனால், தமிழக வணிகர்களை துரத்தி பிடித்து சரிபார்கும் வணிக வரி அதிகாரிகள், வட இந்தியர்களின் வரம்பற்ற பொருள் விற்பனை கண்டுகொள்ளாதது தற்செயலானதா? அல்லது மத்திய அரசின் வாய்மொழி உத்தரவா?
2. தமிழக காவல் துறை, தலைகவசம் அணியாமல் சென்றதால் தம்பதியினரை துரத்தி பிடித்து உயிர் பலி வாங்கி சட்டத்தை காக்கும் தமிழக காவல் துறை, மேற்படி வட இந்திய வணிகர்கள் 100 மேற்பட்ட நெகிழி நாற்காலிகளை இருசக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு  போக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதி என்றும் பாராமல் எவ்வித அச்சமும் இன்றி பயணிக்கின்றனர், அவர்களை போக்குவரத்து காவல் துரையோ அல்லது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவலர்களோ இடைமறித்து வழக்கு போட்டதாக தெரியவில்லை, இவர்களை வழக்கு தொடுக்க கூடாது என்று யாரிடம் இருந்து அழுத்தம் வந்தது, மாநில அரசிடம் இருந்தா அல்லது மத்திய அரசிடம் இருந்தா?

மேற்கண்ட இரண்டு கேள்விகான விடை என்பது நமக்கு ஒரு புரிதலை தருகிறது, என்னவென்றால் அடிமைகளுக்கு (தமிழக மக்களுக்கு) மட்டுமே சட்டம் தன் கடமையை செய்யும், வட இந்தியர்களுக்கு அவர்கள் போடு சட்டை மாதிரிதான் சட்டம்,  அதற்கு சான்றாக ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற இந்திய அரசின் திட்டங்கள் இதற்காகதான் என்று தெளிவாகிறது. கண்கானிகள் (அ.தி.மு.க, தி.மு.க) ஆட்சி நடத்துவதால் ஏற்ப்பட்ட அவலம்.

தமிழக மக்கள் என்ன செய்யவேண்டும்:
மேற்கண்ட அவலம் என்பது தமிழக வணிகர்களை சார்ந்தது, என்று கடந்து செல்லக்கூடாது, நம்முடைய பாதுகாப்பு அச்சுறுத்தாலாக கருதவேண்டும். வட இந்தியர்களின் கடையை முடிந்த அளவிற்கு புறகணிக்க வேண்டும், பொது இடத்தை ஆக்கிரமித்து வட மாநிலத்தவர்கள் போடும் இடங்களை இளைஞர்கள் ஒன்று திரண்டு அறவழியில் வெளியேற சொல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் வருகையை கட்டுப்பாட்டில் வைக்கலாம், ஆட்சியாலர்கள் தங்களை மாற்றி கொண்டு அவர்களும் மக்கள் பின்னால் வருவார்கள்.
ம.தமிழ்தேசியன்

No comments