நாவற்குழி சம்புத்தி சுமன விகாரை தயார்?


யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரை நாளை 13 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளநிலையில் நிர்மாணப்பணிகள் மும்முரமாகியுள்ளது.

இதனிடையே நாவற்குழி சம்புத்தி சுமன விகாரைத் திறப்பு விழாக்காக கூட்டமைப்பு வசமுள்ள சாவகச்சேரி பிரதேசசபை அயலிலுள்ள வீதிகளை அவசர அவசரமாக புனரமைத்து வழங்கியுள்ளது.

நாளை திறப்பு விழாவிற்காக  இன்றிரவு வரை அவசர அவசரமாக வீதிகள் பிரதேச சபையினால் அமைத்து வழங்கப்பட்டதனை காணக்கூடியதாக இருந்தது.

இதனிடையே சம்பிக்க ரணவக்கவின் நகர அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்களும் வீதி அமைப்பு பணிகளில் இணைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

சிவில் உடையில் படையினர் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments