நீராவியடியில் குழப்பம் - பிக்கு அடாவடி
முல்லைத்தீவு – செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நாளைமறுதினம் சனிக்கிழமை பொங்கல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு அத்துமீறி பல்வேறு நிகழ்வுகளை நடத்திவரும் பௌத்த துறவி பிரித் ஓதும் வழிபாட்டை இன்றுமுதல் நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
நீரவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல் நிகழ்வு நாளைமறுதினம் கோலாகலமாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை முன்னிட்டு கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு 108 பானைகளில் பொங்கல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்தே அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குறித்த விகாரையில் பிரித் ஓதும் வழிபாடுகளை மேற்கொள்ள குறித்த பிக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதற்காக சிங்கள ராவய அமைப்பின் தலைவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
Post a Comment