குவைத்செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறப்பு?


குவைத் நாட்டினது செம்பிறைச் சங்கத்தின் நன்கொடையில்  யாழ் போதனா வைத்தியசாலையில்  நிருமாணிக்கப் பட்ட  குவைத்செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை (Teaching Hospital Jaffna - Kuwait Red CrescentRehabilitationCentre) பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவம் 25.07.2019  அன்று காலை 10.00 மணியளவில்  சுகாதார,   போசணை மற்றும் சுதேச வைத்திய  அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன   தலைமையில் நடைபெற உள்ளது.
குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலைத்தை சுகாதார அமைச்சர்  வைத்திய கலாநிதி ராஜித  சேனாரத்ன  , குவைத் செம்பிறைச்  சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி ஹிலால் முசேட் அல் சேயர் ,  இலங்கைக்கான  குவைத் நாட்டுத் தூதுவர் அதிமேதகு கலாவ் (ப்)பூ  தாஃயர் சிங்கப்பூர் சுகாதார சேவை தலைமை நிறைவேற்று அதிகாரியாழ் போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி ஆகியோர்  இணைந்து  வைபவரீதியாகத் திறந்து வைக்கவுள்ளனர். 
யாழ் போதனாவில் அமைந்துள்ள மீள்வாழ்வு சிகிச்சை நிலையமானது சிங்கப்பூர் நாட்டிலுள்ளவைத்தியசாலைகளுக்கு இணையானதாக நவீன உபகரணங்களுடன் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  இங்குள்ள நவீன மருத்துவஉபகரணங்களும் வசதிகளும் இலங்கையில் வேறு எந்த வைத்தியசாலைகளிலும் காணப்படாதவை
குவைத் நாட்டினது செம்பிறைச் சங்கத்தினால் வழங்கப்படுகின்ற ரூபா 530 மில்லியன் நன்கொடை நிதியுதவியில் யாழ் போதனாவைத்தியசாலையில் அமைந்துள்ள இந்த மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை அமைக்கும் திட்டமானது 3 பகுதிகளைக் கொண்டது.கட்டட வடிவமைப்பு மற்றும் நிருமாணம்மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கல்வைத்தியர்கள்தாதியர்கள்மற்றும் இயன் மருத்துவர் முதலானோருக்கான பயிற்சி வழங்கல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த மீள்வாழ்வு சிகிச்சைநிலைய திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.  
குவைத் செம்பிறைச் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் கிலால் முசெய்ட் அல் சேயர் (Dr. Hilal Mussaed Al Sayer, President of Kuwait Red Crescent Society, Kuwait) அவர்களால் இந்த நன்கொடையானது சிங்கப்பூர் மெடிசொலூசன்” வரையறுக்கப்பட்டதனியார் நிறுவனத்திற்கு (Medisolution pte. ltd.) வழங்கப்பட்டு “மெடிசொலூசன்” நிறுவனத்தின் ஊடாக இத்திட்டம்முன்னெடுக்கப்பட்டது.
மூன்று தளங்களைக் கொண்ட  மீள்வாழ்வு சிகிச்சை நிலையக் கட்டட நிருமாணம் 2018 யூலையில் ஆரம்பமாகி 2019யூலையில் பூர்த்தியாகியுள்ளது. 2019 யூலை 25 அன்று பூரணமாக்கப்பட்ட கட்டடம் முழுமையான உபகரணத் தொகுதிகளுடன்யாழ் போதனா வைத்தியசாலை நிருவாகத்திடம் வைபவரீதியாகக் கையளிக்கப்பட உள்ளது.

இந்த மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் என்பு முறிவுமூட்டுக்களில் ஏற்படும் பாதிப்புமற்றும் நீண்டகாலமாகப் படுக்கையில்உள்ளவர்களுக்கான சிகிச்சைகள் (Orthopaedic and Rheumatology), இயன் மருத்துவர்களின் (Physiotherapist) உடற்பயிற்சிகள்,என்பு முறிவுபோர் மற்றும் விபத்துக்களால் கைகால்களை இழந்தவர்களுக்கான செயற்கை அவயவங்களை வடிவமைத்துவழங்குகின்ற   செயற்கை அவயவ  வடிவமைப்பு  நிபுணர்களின் சேவைகள் (Prosthetist and Orthotist), விசேட தேவைஉள்ளோருக்கான தொழில் வழிகாட்டு நிபுணர்களின் (Occupational Therapist) உடற்பயிற்சிகள்சிகிச்சைகள் என்பனவும் வழங்கப்படும்.

யாழ். போதனா மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் செயற்பட ஆரம்பித்ததும் போர்விபத்து மற்றும் ஏனைய அனர்த்தங்களின் போதுபாதிப்புக்குள்ளானவர்களுக்கான சிகிச்சைக்குப் பிந்திய இயன் மருத்துவர்கள்தொழில் வழகாட்டும் சிறப்பு நிபுணர்களின்சேவைகள் நவீன மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சிறந்த முறையில் வழங்கப்படும்

No comments