தேசிய பாதுகாப்பம்-புலனாய்வுப்பிரிவிற்கு சலுகை?


தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், எந்தவொரு நபர் தொடர்பானத் தகவல்களை ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடாமல் இருப்பதற்கு நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு கவனஞ் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரச புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ​ஜயவர்தனவை  நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவுக்கு அழைப்பது தொடர்பில், நேற்று இடம்பெற்ற பல்வேறு ஊடகச் சந்திப்புகளில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவுக்குழுவின் உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்பு பிரிவுகளுடன் தொடர்புடையவர்களின் சாட்சிகளைப் பெறும் போது, அதனை அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதிப்பதா? இல்லையா என்பது குறித்து, கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments