தேர்தல் பிரச்சாரத்திற்கு கோத்தபாய யாழ்ப்பாணம் வருகின்றார்?
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவாகும் நபர் தமிழ் பேசும் மக்களது வாக்குகளுடனேயே கதிரை ஏறமுடியுமென்ற நிலையில் தமிழ் வாக்குகளை சுவீகரிக்க மும்முரமாகியுள்ளார்.
அவ்வகையில் தமிழ் மக்களது வாக்குகளை சுவீகரிக்க யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக கோத்தபாய களமிறங்கவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளில் அவரது ஆதரவாளர்கள் சகிதம் மும்முரமாகியுள்ளார்.
ஏற்கனவே கொழும்பிலுள்ள தமிழ் ஊடக ஆசிரியர்களை அழைத்து பேசியிருந்த கோத்தபாய தற்போது யாழப்பாணத்தின் பக்கம் தனது பார்வையினை திருப்பியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் கோத்தபாயவின் பணத்தில் இயங்குவதாக சொல்லப்படும் டாண் தொலைக்காட்சி முழு அளவில் அவருக்கு ஆதரவாக களமிறங்கவுள்ளது.
இத்தொலைக்காட்சியின் தீவிர ஆதரவாளாகள் அதிலும் பல்கலைக்கழக துறைசார்ந்தவர்கள் என பலரும் தமது ஆதரவை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
அவர்கள் தமிழ் தேசியத்தை பேசிக்கொண்டிருந்தாலும் கோத்தாவின் அரசியலுக்கு அதனையும் பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களாவென்ற சந்தேகம் அனைத்து மட்டத்திலும் உள்ளது.
ஏற்கனவே கொழும்பில் ரணிலுடன் உறவை பேணிய தமிழ் ஊடகத்துறை சார்ந்த பலரும் அங்கு அலுவல் முடிந்திருந்த நிலையில் தற்போது மஹிந்தவின் ஊடாக கோத்தாவுடன் தமது உறவை புதுப்பிக்க முற்பட்டுள்ளனர்.
அண்மையில் மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மஹிந்தவை அழைத்து வந்த மர்மம் இதுவேயென கொழும்பு சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் தமிழ் சிறார்களை குண்டுபோட்டு கொன்றவர்கள்,சக ஊடகவியலாளர்களை கொன்றும் காணாமலும் ஆக்கியவர்களுமான இக்கும்பலுடன் கைகோர்த்துள்ள இவர்களை என்ன செய்வதென அந்த சிங்கள ஊடக செயற்பாட்டாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment