கொக்கிளாயில் விவசாயத்திற்கு தடை?


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலயப் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கேணியிலிருந்து வெள்ளைக்கல்லடி வரையான சுமார் 150ஏக்கருக்கும் மேற்பட்ட, பகுதியில் விவசாயம் செய்ய தமிழ் மக்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பல பூர்வீக விவசாய நிலங்களை உள்ளடக்கி வனஜீவராசிகள் திணைக்களம் சரணாலயத்திற்கென அபகரிப்புச் செய்துவருகின்றது.

இவ்வாறு அபகரிப்புச் செய்யப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குரித்தான பூர்வீக அறுதி உறுதி விவசாய நிலங்களுக்குள், தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாதென வனஜீவராசிகள் திணைக்களம் தடை விதித்து இருக்கிறது. குறிப்பாக கோட்டைக்கேணியிலிருந்து வெள்ளைக்கல்லடி வரையான சுமார் 150ஏக்கருக்கும் மேற்பட்ட,பூர்வீக அறுதி உறுதி மானாவாரி விவசாய நிலங்களான குஞ்சுக்கால்வெளி, தீமுந்தல், பணம்போட்ட கேணி, அம்பட்டன் வாய்க்கால், வெள்ளைக்கல்லடி போன்ற வயல் நிலங்களை இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்துள்ளது.

ஏற்கனவே மணலாறின் பெரும்பகுதியினை ஆக்கிரமித்து வெலிஒயாவாக்கியுள்ள பௌத்த பேரினவாத அரசு தற்போது வனஜீவராசிகள் திணைக்களம் ஊடாக நில ஆக்கிரமிப்பினை முன்னெடுப்பது தெரிந்ததே.

No comments