டக்ளசுக்கு வந்த ஆசை

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீா்க்ககூடிய நம்பிக்கை வெளிப்படுத்தப்படுமாக இருந் தால் வடக்கில் பொது கூட்டணி ஒன்றை உருவாக்க தாம் தயாா் என நாடாளுமன்ற உறுப்பினா் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா். 
வடக்கில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஒருசில அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தரப்பினரால் கூட்டணிக்கான 
பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் குறித்த கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய கூட்டணி உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், 
அது தொடர்பில் கட்சிகளிடையே இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில், வடக்கில் புதிய கூட்டணியை உருவாக்குது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாட்டை வினவியபோதே டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

No comments