கென்யா வானூர்தியிலிருந்து தவறி விழுந்தவர்! லண்டன் தோட்டத்தில் மீட்பு!

லண்டனின் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்திற்கு 3500 அடி உயரத்ஹில் சென்றுகொண்டிருந்த கென்யா நாட்டு  வானூர்தியில் இருந்து நபர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். விழுந்தவர் உயிரிழந்த நிலையில் லண்டனில் உள்ள தோட்டம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

விமானத்தின் அடிப்பக்கத்தில் தரையிறங்கும் கருவி இருக்கும் பகுதியிலிருந்து அவர் விழுந்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
மேலும் அவர் சட்டவிரோதமாகப் பயணம் மேற்கொண்டவர் என்றும்  விமானத்திற்குள் ரகசியமாக நுழைந்து மறைந்து இருந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் கொள்கின்றனர். ஏனெனில் வானூர்தியின் தரையிறங்கும் கருவி இருக்கும் பகுதியில்  உணவு, தண்ணீர், பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என  காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இன்னும் அடையாளங் காணப்படவில்லை என்றும்  அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என காவல்துறை உடகபிரிவு தெரித்துள்ளது.No comments