மைத்திரியை புறக்கணிக்கும் சிங்கள கலைஞர்கள்!


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பங்;கெடுப்புடன் நடைபெறவுள்ள 2019 ஜனாதிபதித் திரைப்பட விருது விழாவை புறக்கணிக்க முன்னணி சிங்கள கலைஞர்கள் தயாராகியிருக்கின்றனர்.இந்நிகழ்வில்; பங்கேற்க கலைஞர்கள் அழைக்கப்பட்டுள்ள நிலையில் மனோஹரி, தயாரிப்பு மேலாளர் ஹேவாசம் மற்றும் பலர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதில்லையென முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

நிகழ்வினை புறக்கணிப்போர் தொகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 26 ம் தேதி கொழும்பில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க மற்றும் கலாச்சார விவகாரத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments