யாழில் முஸ்லிம்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் மாநகரசபையால் ஐந்து சந்தி பகுதியில் அமைக்கப்படும் 5ஜீ அலைக்கற்றை கம்பங்களைக் அகற்றுமாறு கோரி முஸ்லிம் மக்கள் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களைக் கொல்லும் உயிர்கொல்லி கம்பங்கள் எமக்கு தேவையில்லை“ என்று மாநகர சபைக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், பதாகைகளையும் தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments