கிளிநொச்சியில் வறட்சி! 26,269 பேர் பாதிப்பு!

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள தொடர் வறட்சி காரமாண 7562 குடும்பங்களைச் சேர்ந்த 26,269 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி, ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 44 கிராம அலுவலர் பிரிவுகள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.

கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவில் பத்துக்கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த ஐயாயிரத்து 471 பேரும், கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவில் ஏழு கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த 2080 பேரும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 17 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள  7983 பேரும், பச்சிலைப்பள்ளிப்பிரதேச செயலர் பிரிவில் எட்டுக்கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த 1472 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

No comments