13 கிலோ கஞ்சாவுடன் 20 வயது இளைஞன் கைது

சவுத்பார் மன்னாருக்கு கடத்திச் செல்லப்பட்ட 13 கிலோ 770 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவில் நேற்றிரவு 10.30 மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

“மன்னார் சவுத்பார் பகுதியில் இருந்து மன்னார் நகருக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை பொலிஸார் சோதனையிட வழிமறித்தனர். அவர்களில் ஒருவர் தனது அலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆவணங்களைக் கைவிட்டுத் தப்பிச்சென்றார்.

20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துடன், அவர்களால் கடத்திச் செல்லப்பட்ட 13 கிலோ 770 கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் கஞ்சா போதைப்பொருள் கைது செய்யப்பட்ட இளைஞர் மன்னார் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார். தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைது செய்யும் நடவடிக்கையை இலுப்பைக் கடவைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் வதுலியத்தவின் வழிகாட்டலில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜே. ஜெயரொஷான் தலைமையிலான பொலிஸ் பிரிவினரே இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்தனர்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments