பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நடமாடும் இயந்திர காவல்துறை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், தரவுகளை சேகரித்து காவல்  தலைமையகத்துக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்கவும், ‘ஹெச்பி ரோபோகாப்’ என்கிற எந்திர காவல்துறை பணியமர்த்தப்பட்டு உள்ளது.

பூங்காவின் நான்குபுறமும்  உயர் தொழில்நுட்ப ஒளிப்படக் கருவி  பொருத்தப்பட்டு சுமார் 5-6 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவின் நடைபாதையில் மக்களோடு மக்களாக சுற்றி ரோந்து பணியில் ஈடுபடும் இந்த ரோபோ “கொஞ்சம் வழிவிடுங்கள்“ மற்றும் “இன்றைய தினம் நல்ல நாளாக அமையட்டும்“ போன்ற வார்த்தைகளை கூறி பூங்காவுக்கு வருவோரை கவர்ந்து வருவதாகவும் இந்த எந்திர காவல்துறை பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும்பெற்றுள்ளதாகவும் அந்நாட்டுஊடகங்கள் தெரிவிக்கின்றன.


No comments