அடுத்த ஜனாதிபதியும் மைத்திரியே?


அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி மீண்டும் களமிறங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.இது குறித்து மஹிந்த அமரவீர முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுன- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரண்டு தரப்பிலிருந்தும் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கோரியுள்ளார்.

மேலும், இதுகுறித்து பொதுஜன பெரமுனவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரையே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு களமிறக்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இப்போதைய நிலைமையில் இன்னுமொருவரின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.

எனினும், இதன் ஊடாக பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை முறுகல் நிலையை அடைந்துள்ளதாக எவரும் கருதக்கூடாது.

இந்தப் பேச்சுவார்த்தையும் தொடரும். பொதுஜன பெரமுன, தாமரைச் சின்னத்தில் இருந்து ஒரு வேட்பாளரை களமிறக்குவதாக கூறிக்கொண்டிருக்கிறது. 

நாமும் எமது சின்னத்திலிருந்து வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளோம். இந்த விடயம் குறித்துதான் நாம் தற்போது பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை களமிறக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை இடம்பெறலாம்.

பேச்சுவார்த்தைகளின் ஊடாகவே இதனைத் தீர்க்க வேண்டும். எம்மைப் பொறுத்தவரை இரண்டு தரப்பும் இணைந்து ஒரு வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது.

அதேபோல், பிரதமராக யாரை நியமிப்பது என்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என மேலும் தெரிவித்துள்ளார்

No comments