வெலிஓயாவில் குளம் திறக்க வருகிறார் மைத்திரி!


கொழும்பில் நிலவிவரும் பரபரப்பான சூழலின் மத்தியில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எண்ணக் கருவில் உருவான நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்திற்காக முல்லைதீவிற்காக நாளை சனிக்கிழமை வருகை தரவுள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மூன்றாம் திகதி முதல் அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றநிலையில் அவரது விஜயம் அமைந்துள்ளது.

நாளை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தருகின்ற இலங்கை ஜனாதிபதி முதலில் வெலிஓயா பிரதேச செயலகத்திற்குட்பட்ட குளமொன்றினை திறந்து வைக்கவுள்ளார்.அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு பிரதேச சபை பொது விளையாட்டு மைதானத்தில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் இறுதி நிகழ்வில் பங்கேற்கிறார்.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி வருகை தருகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனோரது குடும்பங்கள் மற்றும் கேப்பாபுலவு காணி விடுவிப்பிற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன.

இலங்கை ஜனாதிபதி தம்மை சந்தி;க்கவேண்டுமெனவும் போராட்டகாரர்கள் அழைப்புவிடுத்துள்ள போதும் அவ்வாறான திட்டமிடல்கள் ஏதுமில்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments