யாழ்.போராட்டத்திற்கு ஆதரவு தர அழைப்பு!


கிழக்கின் தமிழர் உரிமைகளை வென்றெடுக்க யாழிலும் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.கல்முனை, கன்னியா விடயங்களில் வடக்கின் உணர்வுபூர்வமான பங்கேற்பிற்கு தென் கைலை ஆதீனம் வேண்டுகோள் ஊடகங்களின் ஊடாக அழைப்புவிடுத்துள்ளார்.

நாளை 2 மணிக்கு யாழ் பேரூந்து நிலையம் முன்பாக நடைபெறும் கல்முனை தமிழ் பிரதேச செயலக தரம் உயர்வு கவனயீர்ப்பிலும் 3 மணிக்கு இலங்கை வேந்தன் மண்டபத்தில் நடைபெறும் கன்னியா மரபுரிமையை பாதுகாப்போம் கருத்தரங்கிலும் பெரும் எண்ணிக்கையில் கலந்து ஆதரவினை வெளிப்படுத்துமாறு அன்புரிமையுடன் வேண்டுகின்றோமென அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

இதேவேளை தென் கைலை ஆதீனம் மற்றும் கிழக்கு பிரதிநிதிகள் நாளை யாழில் சந்திப்புக்களையும் நடத்தவுள்ளனர்.

No comments