மாமா வேலை:சித்தருக்கு தெரியாதாம்?


தமிழகத்தின் பிரபல சொல்லான மாமா வேலை பற்றி தனக்கு தெரியாதென சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு ஒரு அந்தஸ்த்து உள்ளது. அந்த அர்த்தத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை பார்க்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினாரா? என தர்மலிங்கம் சித்தார்த்தன் சந்தேகமும் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரது கூட்டமைப்பின் மாமா வேலை சொற்பிரயேர்கம் அவர்களிற்கு சிறிதேனும் ரோசத்தை வரச்செய்துள்ளது.

இப்போது எவ்வளவு தான் திட்டித்தீர்த்தாலோ கிழித்தாலோ எருமை மாட்டின் தோலில் பெய்த மழை போல கூட்டமைப்பு கண்டுகொள்வதில்லை.

ஆனாலும் தற்போது முன்னாள் முதல்வரின் மாமா வேலை சீற்றத்தை அவர்களிற்கு தந்துள்ளது.

அதற்கு வேறு அர்த்தங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக தனக்கு தெரியவில்லை எனவும் உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே தன்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை எனவும் தனது ஆதரவாளர்களிடையே தெரிவித்துள்ளார்.

No comments