சிங்கள பேரினவாதத்திற்கு சலாம் போடும் முஸ்லீம் தலைமை?


எவ்வாறேனும் சிங்கள தேசத்தை திருப்திப்படுத்தி தமது அரசியல் இருப்பை பேண முஸ்லீம் அரசியல்வாதிகள் பாடுபட்டுவருகின்றனர்.அவ்வகையில் பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர், முன்னாள் அமைச்சர் கபீர் ஹசீம்; ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடு ஒன்று இன்று நடைபெற்றது.

பௌத்த பிக்குகளிற்கு தானம்,அன்னதானமென  கபீர் ஹசீம்; கலக்கிய போதும் கட்சி ஆதரவாளர்கள் தவிர்ந்த பொதுமக்கள் கூடிய அக்கறை செலுத்தியிருக்கவில்லை.

இதனிடையே பயங்கரவாதிகளை பிரத்தியேகமாக பாதுகாத்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பலவந்தமாக முடக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

அத்துடன் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதால் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படும். பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டால். உரிமைகளுக்காகவும், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க முடியாது. போராட்டங்களில் ஈடுப்படும் போது அரச சொத்துக்களுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் பயங்கரவாதிகள் என்று கருதி கடூழிய சிறை தண்டனை வழங்கும் ஏற்பாடுகள் காணப்படுகின்றது. மறுபுறம் பயங்கரவாதிகளை எவ்வாறு அணுக வேண்டும் என்று பிரத்தியேக ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டினை இல்லாதொழிப்பதாகும் என்றும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் முஸ்லீம் அரசியல் தலைமைகளையும் இணைத்து மகிந்த தரப்பு பயணிக்க தயாராவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments