கூண்டோடு ராஜினாமா?

தெற்கில் அதிகரித்துவரும் பௌத்த இனவாதத்தின் மத்தியில் இலங்கை; ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இன்று தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
அதனை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்து ஏனைய அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பௌசியின் இல்லத்தில் இன்று காலை கூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களான கபீர் ஹாஷிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் இராஜினாமா செய்யமாட்டார்கள் என செய்திகள் வெளியாகியிருந்த இந்த சந்தர்ப்பத்தில், குறித்த இருவர் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இராஜினாமா செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதேவேளை அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தாலும், தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவளிக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இதனிடையே அவர்கள் பதவிகளில் இருந்து விலவதால் எதையும் சாதிக்க முடியாது. அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும். எதிர்கட்சியில் இருந்து சுயாதினமாக செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் இதுவும் நாடகத்தின் ஒரு அங்கமென அவதானிகள் தெரிவித்துள்ளனர்.



No comments