முதல் மரணதண்டனை வெள்ளிக்கிழமை நிறைவேற்றம்


வரும் 29 அல்லது 30 ஆம் திகதி 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

அதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார் என கூறப்படுகிறது.

மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான இடமும் தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறையில் இதற்கான இடம் தயார் செய்யப்படுகிறது.

அதன் நிமித்தம் சிறைக்கைதிகள் பலர் பூசா மற்றும் அங்குனுகுலபெலஸ்ஸ சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலில் ஆபத்தான பல முடிவுகளை வெள்ளிக்கிழமைகளிலேயே மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments