யாழில் நாளை போராட்டம்ல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி  யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நாளை மதியம் 2 மணிக்கு இப்போராட்டம் இடம்பெறும் என சைவ மகாசபை அறிவித்துள்ளது.
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி சைவ, பௌத்த, கிறிஸ்தவ மதகுருமாரும் அப்பிரதேச பொது அமைப்புக்களின் பிரநிதிகளும் பொதுமக்களும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணவேண்டிய தேவை இருந்தும் அரசு இப்பிரச்சினையை இழுத்தடித்து வருகின்றது. இதனால் உண்ணாவிரதம் இருப்போரின் உடல்நிலை மோசமாகிக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே அங்கு உண்ணா விரதம் இருக்கும் உறவுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதுடன் கல்முனை பிரதேச செயலகத்தை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தரம் உயர்த்தவேண்டும் என வலியுறுத்தி நாளைய போராட்டம் இடம்பெறவுள்ளது.
இப்போராட்டத்தில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைவரையும் உணர்வுபூர்வமாக பங்கெடுக்குமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.

No comments