இடிக்கப்பட்டது யாழ் பொது நூலக கல்வெட்டு

யாழ்.பொதுநுாலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிழையான வராற்றை குறிக்கும் கல்வெட்டை அகற்றும் நடவடிக்கைள் இன்று யாழ்.மாநகரசபையினால் மேற்கொள்ளப்பட்டது.

யாழ் பொது நூலகத்தின் வரலாறானது, குறித்த நூலக வாயில் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனினும் அதில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்பில் பிழைகள் இருப்பதாக எமது முன்னோர்களும் சபை உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் இந்த பிழையை திருத்தியமைக்க வேண்டுமென மாநகர சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானத்தின் பிரகாரம் நூலக வரலாற்றில் பிழையான தகவல்கள் திணிக்கப்பட்டுள்ளனவா?

என ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டு, குறித்த கல்வெட்டில் பிழை உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய நூலக வரலாற்றை திருத்தியமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் இடம்பெற்று வருகின்றன

இதேவேளை நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அண்மையில் நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட யாழ் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் மிக விரைவில் வரலாறுகள் திருத்தி அமைக்கப்படும்.

 என உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments