கிளிநொச்சி நாறுகிறது கன்னியாவுக்கு விடுப்புப் பார்க்கப் போன சிறீதரன்



அமைச்சா் மனோகணேசன் தலமையில் இன்றைய தினம் கன்னியா பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் அதிகாாிகள் குழு விஜயம் செய்து பாா்வையிட்டிருந்தது.

இதன்போது கிளிநொச்சியிலிருந்து குறித்த விஜயத்தில் எதுவித சம்பந்தமுமற்ற வகையில் தமிழரசுக் கட்சியின் நாாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கன்னியாவிற்குச் சென்றிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருகோணமலை கண்னியா வென்னீரூற்று பிள்ளையாா் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டுவதற்கு பௌத்த பிக்குகள் முயற்சித்த நிலையில் ஏற்பட்ட  முறுகல் நிலைகளையடுத்தே அமைச்சர் மனோ கணேசன் தலைமயிலான குழுவினர் திருகோணமலை கன்னியா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதே சிறிதரனும் குறித்த குழுவுடன் சென்று இணைந்திருக்கிறார்.

கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் வவுனியா எல்லைக் கிராமங்களிலும் நடக்கும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பினைத் தடுத்த நிறுத்த வக்கற்றவர்களாக இன்னமும் ஐக்கிய தேசியக் கட்சியின் அற்ப சலுகைகளுக்கு விலைபோய்க்கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியியும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் உள்ளிட்டவர்களும் உள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் மனோ கணேசன் தனது நகர்வுகளை வடக்கு கிழக்கு நோக்கி நகர்த்திருவரும் நிலையில் தாங்களும் அதில் பங்காளிகள் என காட்டிக்கெள்வதற்கே ஒட்டுண்ணிகளாக ஐதேக அமைச்சர்களுடன் ஒட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

அண்மைய நாட்களில் சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவுகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுடன் இணைந்து சிறிதரன் பங்கேற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

No comments