அத்துரலிய ரத்ன தேரருக்காக பாய்ந்த மறவன்புலோ?


சைவர்களையும் புத்தர்களையும் மோத விடும் சூழ்ச்சியில் கத்தோலிக்கர் காலம் காலமாக இலங்கையில் செயற்பட்டு வருவதாக மறவன்புலோ சச்சிதானந்தன் புதிய குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளார்.

கன்னியா மற்றும் செம்மலை நீராவியடி புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற  நாடாளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் உதவுவாரா என மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் முந்தையநாள் நடந்த கூட்டம் ஒன்றில் கேட்டுள்ளார்.

அவர் வவுனியாக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அதேவேளை நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் அவரது ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

திருக்கேதீச்சரக் கற் கோயிலை உடைத்து மன்னார்க் கோட்டையையும் ஊர்காவற்துறை கடல் கோட்டையையும் கட்டிய போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் நேற்று அருவி ஆற்றங் கரையில் மரியாள் சிலையை வைத்த காலம் வரை மன்னார் மாவட்டம் முழுவதையும் கத்தோலிக்க மயமாக்கும் முயற்சியில் செல்வம் அடைக்கலநாதனின் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதை அவர் மிகத் திறமையாக மறைத்து வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் மீது பாய்ந்துள்ளார்.

வணக்கத்துக்குரிய அத்துரலியே இரத்தின தேரர் வன்னியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல வன்னியில் வாழ்கின்ற சைவ மக்களின் வாக்குகளைப் பெற்று வென்றவரும் அல்ல.அடைக்கலநாதன் அவர்களோ, வன்னியில் உள்ள சிறப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள சைவர்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். 
வெற்றி பெற்றபின் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மன்னார் மாவட்டச் சைவர்களுக்கு நீங்கள் இழைத்து வரும் கொடுமைகளை அநீதிகளை குற்றங்களை தீமைகளை அடுக்கடுக்காகச் சொல்கிறார்களெனவும் மறவன்புலோ சச்சிதானந்தன் பாய்ந்து வீழ்ந்துள்ளார்.

No comments