''சம உரிமை, சம ஊதியம்'' போராடத் தயாராகும் சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து மீண்டுமொரு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 14 ஆம் திகதி ''சம உரிமை, சம ஊதியம்'' என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 1991 யூன் 14 ஆம் திகதி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அலுவலகத்திலிருந்தும், வீட்டிலிருந்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் பெரிய அளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என தொழிற்சங்கங்களும் பெண்கள் உரிமைகள் அமைப்பும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தான் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 20% குறைவாகவே உள்ளது. மேலும் கல்வித்தகுதி சமமாக இருந்தாலும் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 8% குறைவாகவே உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments