உலகமெங்கும் வானூர்தி பயணக் கட்டணம் அதிகரிப்பு!

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போர் மற்று  எண்ணெய் விலை ஆகியவற்றால்  விமான நிறுவனங்களின் லாபம் இந்த ஆண்டு தொடர்ந்து குறையக்கூடும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு கூறியிருக்கிறது.2019-ஆம் ஆண்டு விமான நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகர லாபம் 35.5 பில்லியன் டொலராக இருக்கும் என்று நம்பியிருந்தது. ஆனால் தற்போது அது 28 பில்லியன் டொலர் குறைந்துள்ளது.
ஊழியர்களுக்கான செலவு, எண்ணெய் விலை, கட்டமைப்புச் செலவு ஆகியவை அதிகரித்திருப்பது அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.அமெரிக்க-சீன வர்த்தகப் போரால் விமானச் சரக்குப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்படக்கூடும்ம அதே சமயம் பயணிகள் போக்குவரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
அதனால் விமானக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.தென் கொரியத் தலைநகர் சோலில் அனைத்துலக விமான நிறுவனங்களுக்கான சந்திப்பு நடைபெறுகிறது.  

No comments