ஈழ ஏதிலி பிரித்தானியாவில் வசிக்க விண்ணப்பம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் மானஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ ஏதிலி ஒருவர், பிரித்தானியாவில் தமது சகோதரியுடன் வசிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்.

இலங்கையில் அவர் பெரும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலையிலேயே அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்றதாகவும், எனினும் அங்கும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தாம், நரக வேதனயை அனுபவிப்பதாகவும் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

2013ம் ஆண்டு க்றிஸ்மஸ் தீவை சென்றடைந்த அவர், அங்கு சிலகாலம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மானஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு இது தொடர்பாக விண்ணப்பித்திருந்த போதும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தி ரவிராஜா சுப்ரமணியம் என்று 37 வயதான அவர் தற்போது மீண்டும் தமது விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

மானஸ்தீவில் தடுப்பில் உள்ள ஈழ ஏதிலி ஒருவர் பிரித்தானியாவில் குடியேறுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

No comments