வலதுசாரிகளை முடக்கவேண்டும் ஏஞ்செலா மெர்கெல்!

ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கெல் கட்சியைச் சேர்ந்த  ஒருவரான வால்ட்டர் லியூப்கே என்பவரை அகதிகளின் வருகைக்கு எதிரான சிந்தனை உடைய பிரிவின் ஒருவரால்  ஜூன் 2ம் தேதி  சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்
இது ஜெர்மன் அரசுத் தலைமைக்கு பேரதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருந்தது. 

அண்மையில் டார்ட்மண்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ஏஞ்செலா மெர்கில் ‘தீவிர வலதுசாரிகளை முடக்க வேண்டிய அவசியம்’ ஏற்பட்டுள்ளது என்று  தெரிவித்துள்ளார்.

2015-ல் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜெர்மனிக்குள் அகதிகள் வரத்து அதிகமானது, உலகிலேயே வெளிப்படையாக அகதிகளை வரவேற்ற முதல் அதிபராக ஏஞ்செலா மெர்கெல் திகந்து வருகிறார், இவருக்கு உறுதுணையாக  கொல்லப்பட்ட லியூப்கேஇருந்தவர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

No comments