அடக்கிவாசிக்கப்படும் சிங்கள தேச வெசாக்!


இலங்கையில் சிங்கள தேசம் தனது தேசிய வெசாக்தின நிகழ்வுகள் இம்முறை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தி கொண்டாடவுள்ளது.இது தொடர்பில் இலங்கை புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிமபெரேரா அறிவிப்பினை இன்று வீடுத்துள்ளார்.தேசிய வெசாக்தின நிகழ்வுகள் வழமையாக ஆறு நாட்கள் நடைபெறும். எனினும், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு இம்முறை 18, 19 ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெசாக் தோரணங்கள் அமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையும்மீறி அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் அதற்கு புத்தசாசன அமைச்சு பொறுப்புகூறாது.

வீடுகளில் பௌத்த கொடிகளை ஏற்றுங்கள். வெசாக் கூடுகளை காட்சிபடுத்துங்கள். பொதுவெளியில் செய்வதை நிறுத்துங்கள். நான்கு பீடங்களின் மகாநாயக்க தேர்களும் இது குறித்து அறிவுறுத்தல் விடுத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

No comments