யாழில் மீண்டும் ஆமிக்கு காவடி!


மீண்டும் இலங்கை படைகளிற்கு காவடி தூக்கும் கலாச்சாரம் யாழில் தலைதூக்கியுள்ளது.இதன் பிரகாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகபேரவை உறுப்பினர்களுக்கும் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதிக்கும் இடையில் சந்திப்பு ஆரம்பமாகி நடைபெறுகின்றது.

இதனிடையே 2017ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் விக்னேஸ்வரன் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

ஏப்ரல் 30ஆம் நாளில் இருந்து பதவி ,டைநிறுத்தம் செய்யப்படுவதாக பேராசிரியர் விக்னேஸ்வரனுக்கு, சிறிலங்கா அதிபரின் செயலரினால் கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்றே அந்தக் கடிதம் தொலைநகல் மூலம் அவருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது, எனினும், தமக்கு அவ்வாறான கடிதம் கிடைக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேராசிரியர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் தேடுதல்களை நடத்தி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம், இனப்படுகொலை தொடர்பான பதாதைகளை கைப்பற்றியதுடன், மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலரையும் கைது செய்தனர்.இந்தச் சம்பவத்தின் பின்னர் துணைவேந்தர் பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளது.

எனினும், தற்போதைய பாதுகாப்புச் சூழலுக்கும், துணைவேந்தர் விக்னேஸ்வரனின் பதவிநீக்கத்துக்கும் தொடர்புகள் இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.





No comments