தூத்துக்குடி படுகொலை திரைப்படமாகிறது!

தூத்துக்குடி படுகொலையை நினைவேந்தும் முகமாக காவல்துறை உங்கள் நண்பன் என்ற தலைப்பில் புதிய படத்தின் அறிவிப்பு இன்று மே 22 வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். அந்த துயர நிகழ்வினை நினைவுபடுத்தும் விதத்தில்
 காவல்துறை உங்கள் நண்பன் என்ற தலைப்பில் புதிய திரைப்பபடத்தின் அறிவிப்பு தலைப்பு மற்றும் முதல் பார்வை  வெளியாகியுள்ளது.

இதன் தலைப்பு பார்வையில் காவல்துறை உங்கள் நண்பன் என்ற தலைப்பு வெள்ளை நிறத்தில் வெளியாக, தலைப்பின் இடது ஓரத்தில் துப்பாக்கியுடன் எழும் அனிமேஷன் காவல்துறை, வலது ஓரத்தில் எழும் போராட்டக்காரர்களை சுட, முழு தலைப்பும் சிவப்பு நிறத்தில் மாறுகிறது. வஞ்சப்புகழ்ச்சியணி போல காவல்துறை உங்கள் நண்பன் என்ற தலைப்பும், முதல் பார்வையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டுவதோடு இது தூத்துக்குடி படுகொலை சம்பவத்தையே மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் என்று தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.  

No comments