சீமானுக்கு விழுந்தவை வெறித்தனமான வாக்குகள்; பிரபல ஆய்வாளர்..

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் சீமானின்  நாம்தமிழர் கட்சியினர் 16 லட்சத்து 29 ஆயிரத்து 771 வாக்குகள் பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.86 சதவீதம் ஆகும், தமிழகத்தில் நான்காம் இடத்தை பிடித்துள்ள நாம்தமிழர் கட்சியின் வளர்ச்சி குறித்து ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அரசியல் விமர்சகரும் ஆய்வாளருமான ரவீந்திரன் துரைசாமி நாம்தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் அனைத்தும் வெறித்தனமானதும் நேர்மையானதுமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அவர்களுக்கு மாற்று கட்சி எதிர்ப்பு வாக்குகளை விட புதியவர்களே அதிகம் வாக்களித்துள்ளனர் என கணிக்க முடிகிறது என்று கூறினார்.
மேலும் மற்ற காட்சிகள் தொகுதிக்கு தொகுதி வாக்கு வீதங்கள் பெரியளவு வித்தியாசங்கள் இருப்பதாகவும் ஏனெனில் அவை கூட்டணி மற்றும் சாதிவாரியான வாக்குகளை அடிப்படையாக கொண்டவை , அனால் சீமானின் நாம்தமிழர் கட்சி அப்படியல்ல, தமிழகம் தழுவி கிட்டத்தட்ட ஒரே அளவான வாக்குகளை பெற்றிருப்பது இவர்களின் தனித்தன்மையையும், சாதிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர் என்று கருதமுடியும் என்று துரைசாமி கூறியுள்ளார்.

No comments