கிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக!

தனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில்  ஆட்சி அமைக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவிருப்பதாக அரசியலில் கால் பாதிக்கவிருக்கும் நடிகர் ரஜனிகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் ஊடக வியலாளர்களை சந்தித்த அவர்.
இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை நிலவியது. டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன்.

தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.

ராஜனியை தங்கள் பக்கம் இழுப்பதற்கு பாஜக கடும் முனைப்புக்கள் எடுத்துவரும் நிலையில் ராஜனிஜின் இந்த கருத்துக்கள் அவர்களை குளிர்மைப் படுத்தியுள்ளத்தக்க அறியமுடிகிறது.

No comments