கூட்டமைப்பு வேடிக்கை மட்டும் பார்க்கின்றது?


முயற்சிக்கும், பேரினவாதிகளின் செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சிவசக்தி ஆனந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு சின்னங்களை கையகப்படுத்தும் முயற்சியில் பேரினவாதிகள் அண்மைகாலமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது கிண்ணியாவிலும் தமிழர் ஒருவருக்கு சொந்தமான பூர்வீக பகுதியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
தமிழ் மன்னன் இராவணனால், கிண்ணியா வெந்நீர் ஊற்று அமைக்கப்பட்டது என்ற  வரலாற்றுப் பதிவுகளின்படி அப்பகுதி தமிழர்களின் பாரம்பரியத்துடன் இரண்டறக்கலந்த மிக முக்கியமான பிரதேசமாக கொள்ளப்பட்டு வருகின்றது.
வராலாற்று சிறப்புமிக்க இப்பகுதியை பேரினவாதிகளின் அடையாளமாக மாற்றுவதற்கு முயற்சிகள் அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றது.
இத்தகைய செயற்பாடுகள், நாட்டில் நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் ஒருபோதும் ஏற்படுத்தாது என்பதை அரசாங்கம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்.
மேலும் எந்தவொரு மதவாதிக்கும் ஏனைய மதங்களின் மீது அதிகாரம் செலுத்தவோ அல்லது மத சின்னங்களை அழிப்பதற்கோ அதிகாரம் இல்லை.
அத்துடன் இந்த வெந்நீர் ஊற்றுக்கு அருகிலுள்ள வில்கம் விகாரையைச் சேர்ந்த தேரர்களாலேயே இப்பகுதியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவைகளை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்பட்டு வருகின்றபோதிலும் நிரந்தர தீர்வுகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது கண்டனத்திற்குரியதாகும்.
இதேவேளை குறித்த பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு அப்பகுதியை கையகப்படுத்தப்படும் செயற்பாடொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வில்கம் விகாரையைச் சேர்ந்த தேரர்களும் தொல்பொருள் திணைக்களமும் காணியின் உரிமையாளரும் பிள்ளையார் ஆலய அறங்காவலருமான க.கோகிலறமணியிடமிருந்து அக்காணியை பறிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
22பேர்ச் அளவுடைய இக்காணியை கோகிலறமணியின் பேரனுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் இக்காணியை கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்களை தேரர்கள் முன்னெடுத்திருந்தனர். எனினும் உரிமையாளரான கோகிலறமணி அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில், அக்காணியைக் கையகப்படுத்துவதற்கு முனையும் தேரர்களின் செயற்பாட்டிற்கு இசைவாக அரசாங்கமும் வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருக்கின்றது.
இதன்மூலம் வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கலை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு துணை நிற்கின்றது என்பது உறுதியாகின்றது.
அந்தவகையில் தமிழ் பிரதிநிதிகளும் இவ்விடயத்தில் குரல்கொடுத்து தடுக்காமல் இருக்கின்றனர்” என சிவசக்தி ஆனந்தன் கவலை வெளியிட்டுள்ளார்.

No comments