யாழிற்கு மைத்திரி,ரணில் படையெடுப்பு?


தேர்தல் களம் சூடுபிடிக்கவுள்ள நிலையில் வடக்கு நோக்கி தெற்கின் பார்வை திரும்பியுள்ளது.ஏற்கனவே கிராம எழுச்சியை தாண்டி வடக்கிற்கு பனை நிதியமென ரணில் விக்கிரமசிங்க  அள்ளி வீச தொடங்கியுமுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்த மாதம் ரணில் மற்றும் மைத்திரி,அமைச்சர்கள் என பலரும் படையெடுக்கவுள்ளனர்.

சமூர்த்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ரணில் முதலில் யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில்  யாழ்.மாநகர சபை வளாகம் மற்றும் மணியம் தோட்டப் பகுதி உள்ளிட்ட யாழ்.நகரப் பகுதிகளில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், இலங்கைப்பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளிலுள்ள குடும்பங்களின் விபரங்களையும் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.

No comments