ரிசாட் பதியுதீனை பாதுகாக்க கூட்டமைப்பு தலைமை முடிவு!


அமைச்சர் ரிசாட் பதியுதீன் விவகாரத்தில் கூட்டமைப்பு தலைமை ரணிலின் கோரிக்கையின் பேரில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.

இது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ள போதும் பகிரங்கமாக பேசாது தற்போது தமது ஆதரவாளர்கள் மூலம் தலைமைக்கு கோரிக்கை விட தொடங்கியுள்ளனர்.

அவ்வகையில் வன்னி மக்களின் விருப்பத்தினை அறிந்து அதன்பால் மட்டுமே அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான அவ நம்பிக்கை பிரேரணைக்கு வாக்களிக்க வேண்டுமென வவுனியா மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் கிளையால் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான அவ நம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றில் வாக்கெடுப்பிற்கு வரும் பட்சத்தில் வன்னி மக்கள் மற்றும் கூட்டமைப்பின் வன்னித் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தினை அறிந்து அதன் பால் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் . அதேநேரம் குறித்த அமைச்சர் தொடர்பான தகவல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பிலும் அவர்களே அறிந்த நிலையில் வன்னி மக்களின் விரும்பத்தை அறிந்து அதனை வெளிப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தினை ஒத்தே இறுதி தீர்மானம் அமைய வேண்டும்.
இதேநேரம் குறித்த விடயம் தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் நலனுடன் தொடர்பு கட்டதாகவும் அமைவதனாலும் வன்னி மாவட்டங்கள் குறித்த அமைச்சரினால் தொடர்ந்தும் பல நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ள நிலையில் தகுந்த தீர்க்கமான முடிவை எதிர்பார்ப்பதாக தெரிவித்து அமைச்சரால் வன்னி மாவட்டம் எதிர்நோக்கும் நெருக்கடியும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டில் ஏப்பிரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளுடன் அரசியல்வாதிகளிற்கும் தொடர்பு உண்டு என மக்கள் மட்டுமல்ல மதத் தலைவர்களும் நம்பும் நிலையில் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை உரிய முறையில் கையாளாமல் அவரைக் காப்பாற்ற அரசாங்கம் முயற்சிக்குமானால், அரசாங்கத்தின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எச்சரித்துள்ளார்.

சுமார் 300 பேரின் பரிதாப இறப்பில் ஒரு அமைச்சருக்கு தொடர்பு உண்டு எனக் கூறும் நிலையில் அவரை காப்பாற்ற முயற்சித்தால், அரசாங்கத்தின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள். அதேநேரம் அமைச்சராக தொடரும் வரையில் நீதியான விசாரணை இடம்பெற மாட்டாது என்பதனை நான் அறிவேன் என்றார்.

No comments