புதிய இந்திய உருவாக்க மக்கள் ஆணை தந்துள்ளனர்! மோடி பெருமிதம்!

உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது என்று தேர்தல் வெற்றி குறித்து இந்திய பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரை

பாஜக கூட்டணியின்  வெற்றி உறுதியான பின்னர் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியஇருவரும் டில்லியில் உள்ள பாஜகவின் தேசிய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து  தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும்போது,
புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு தந்துள்ளனர்.

இந்த தேர்தலில் நாடு வென்றுள்ளது, நாட்டு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார் மேலும்
 நாங்களும் எங்கள் கூட்டணி கட்சிகளும் இந்த பிரமாண்ட வெற்றியை மக்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம் இந்த தேர்தலில் தான் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது; கடும் வெயிலிலும் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று பெருமிதத்தோடு மோடி உரையாற்றியுள்ளார்.

No comments