முகத்துவாரத்தில் சிங்களவருக்கு காணியும் வீடும்!

முல்லைத்தீவு- கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 3 ஏக்கா் அரச காணி உள்ளதாக அப்பட்டமான பொய்யை சொல்லி தமிழ் மக்களுக்கு சொந்த மான காணிகளை சிங்கள மக்களுக்கு தாரைவார்க்க பட்டு இருக்கிறது.
1979ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் படி கொக்கிளாய் – முகத்துவாரம் பகுதியில் பருவாகால தொழிலுக்காக வந்து தங்கியிருக்கும் மீனவர்கள் என கொக்கிளாய் சிங்கள மக்கள் என சொல்லப்பட்டு இருந்தது. 1984ம் ஆண்டு தொழில் நோக்கத்திற்காக கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் தங்கியிருந்த சிங்கள மக்கள் பின்னா் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டதை தொடா்ந்து அங்கே நிரந்தரமாக தங்கி தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து குடிசைகள், வாடிகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனா். 2016 ஆண்டில் மட்டும் 507 சிங்கள குடும்பங்கள் அப்பகுதியில் குடியேற்றப்பட்டனர். 2 ஆம் திகதி ஜூன் மாதம் 2016 ஆண்டு நடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இவை ஒப்புக்கொள்ளப்பட்டன.
அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் , போராட்டம் என்பன நடத்தப்படுவது சட்டப்படி குற்றம் . ஆனால் சட்டத்தை மீறி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட சிங்கள மக்கள் முகத்துவாரம் பகுதியில் தாம் நீண்டகாலம் வாழ்வதாகவும் தமக்கு நிரந்தர வீடுகளை பெற்றுத்தருமாறுகோாி போராட்டம் நடத்தினா். இதனடிப்படையில் மாவட்ட செயலக அதிகாரிகள் அங்கு 3 ஏக்கா் வரையான அரச காணி உள்ளதாகவும் அதனை சிங்கள மக்களுக்கு வழங்கி அங்கேயே வீட்டுதிட்டத்தையும் வழங்குவதாக உறுதி அளித்து இருக்கிறார்கள் .
உண்மையில் முகத்துவாரம் பகுதியில் அரச காணிகளே இல்லை என அப்பகுதி தமிழ் மக்கள் ஆதாரங்களுடன் சொல்லுகிறார்கள். கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் உள்ள காணிகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியாா் காணிகள். 
அந்த காணிகளுக்கு சொந்தக்காரா்கள் பலா் இப்போதும் இருக்கிறாா்கள். அவா்கள் சிலாிடம் ஆவணங்களும் இருக்கிறது. இந்நிலையில் உாிமை கோரப்படாத அல்லது காணி உாிமையாளா்கள் வெளி இடங்களில் உள்ள காணிகளை அரச காணிகளாக அடையாளப்படுத்தி சிங்கள மக்களுக்கு வழங்க பட்டு இருக்கிறது
அரச காணிகளில் 30 தொடக்கம் 35 வருடங்கள் குடியிருக்கும் தமிழ் மக்களுக்கே இன்னமும் வீட்டுதிட்டம் வழங்கப்படவில்லை. குறிப்பாக புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதிகளில் 30 தொடக்கம் 35 வருடங்கள் மத்திய வகுப்பு காணிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அரச காணி என்பதற்காகவே இன்றுவரை வீட்டுதிட்டம் வழங்கப்படவில்லை.ஆனால் கொக்கிளாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டு அவை சிங்கள குடியேற்ற திட்டங்களுக்கு பகிரப்பட்டு இருக்கிறது 

No comments