நள்ளிரவு 12 மணிக்கு கூப்பிட்டாலும் நான் வருவேன்; கமல்!

இந்திய பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எதிர்பார்த்திராத வாக்குகளை பெற்றுள்ளது.இது அக்கட்சியினருக்கே ஆச்சரியத்தை உண்டுபண்ணியுள்ளதாக கூறுகின்றனர்.
தமக்கு பொறுப்புஅதிகரித்துள்ளதகா கமலஹாசன் கூறியுள்ளார். கட்சியின் முக்கிய உறுப்பினர்களை அழைத்து பேசியபோது;

தேர்தல்தான் முடிந்துவிட்டதே, இனி அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் போனால் போதும் என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். தினந்தோறும் மக்கள் பணி செய்யுங்கள். மக்களின் குறையைக் கேளுங்கள், ஒவ்வொரு நாளும் களத்தில் நில்லுங்கள். தொகுதிக்குச் சென்று மக்கள் குறையைக் கேட்டுச் செய்யுங்கள். அப்படி முடியாதவர்கள் ஒதுங்கிக்கொள்ளலாம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய கமல்ஹாசன் தொடர்ந்து பேசியிருக்கிறார்.

“மக்கள் கூப்பிடும் நேரத்திற்கு போய் குறைகளைக் கேளுங்கள். என்னை அதிகாலை 4 மணிக்கு அழைத்தாலும் வருவேன், இரவு 12 மணிக்கு அழைத்தாலும் வருவேன், அதுபோல் நீங்களும் மக்கள் பணிக்குத் தயாராகிக்கொள்ளுங்கள். இந்தத் தேர்தலில் நமக்குக் கிடைத்தது பெரிய வெற்றிதான். 16 தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறோம். நம்பிக்கையுடன் மக்கள் பணியைத் தொடருங்கள். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுச் சிறப்பாக வேலை செய்தவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வாய்ப்புகள் உண்டு” என்று கூறியுள்ளார் கமல்.

No comments