நீதி கேட்கும் தமிழரசு பிரதிநிதிகள்?


மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை கலைக்கப்பட்டாலும் தமது குடுமிப்பிடி சண்டைகளை கைவிட அவர்கள் தயாராகவில்லையென்பதை தொடர்ந்தும் நிரூபித்தே வருகின்றனர்.அவ்வகையில் வடக்கு மாகாண அவைத்தலைவரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் ஆளுநர் இன்று தர்மசங்கடங்களிற்குள்ளாகியிருந்தார்.

வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கைதடியில் உள்ள முதலைமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்  மாகாண சபை ஆடசியில் இருந்த போது நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட் விசாரணை குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி அனுப்பிய கடிதம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

குறிப்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சில்  இரண்டு நாட்களில் 8 கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்படடமை விசாரணைக் குழுவால் கண்டறியப்பட்டுள்ளது.அவ்வாறு 8 கோடி எவ்வாறு செல்வு செய்யப்பட்டது என்பது குறித்து பூரண கணக்காய்வு செய்யப்பட்டு தவறு இழைத்ததாக காணப்படுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த விசாரணைக் குழு பரிந்துரைத்திருந்தது.எனினும் இன்றுவரை எவ்வித தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு வட பிராந்திய கணக்காய்வாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பிய அவைத்தலைவர் தகவலுக்காகவும் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநருக்கும், பிரதம செயலருக்கு பிரதிகளை  கடந்த 9 ஆம் திகதி அனுப்பியுள்ளார்.இதனை அவர் ஊடகங்களிற்கும் அனுப்பியிருந்தார்.

அவ்வாறு அனுப்பிய கடிதம் தொடர்பில் ஆளுநரிடம் வினவிய போது,மாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படடமை,அது தொடர்பில் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டமை மற்றும் அண்மையில் அவைத்தலைவர் அனுப்பியிருந்த கடிதம் இவை தொடர்பில் எதுவுமே தெரியாது என ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆளுநர் உடனடியாக தனது செயலாளரை அழைத்து தமக்கு இவ்வாறு ஓர் கடிதம் வந்ததா?என கேடடார்.அப்போது அந்த கடிதம் தொடர்பில் ஆராய்ந்த போது குறித்த கடிதம் கிடைக்கப்பெற்றதை உறுதிப்படுத்தினார்.அதன் பின்னர் ஆளுநர் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும்.எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

இதேவேளை வடக்கு மாகாண சபையின் காலத்தில் மாகாண அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட்டபோது முதலமைச்சரால் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.அந்த விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கையில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.எனினும் அப்போது பதவியில் இருந்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ததை தவிர மேலதிக நடவடிக்கை எடுத்துவும் எடுக்கப்படவில்லை..;இதனை தொடர்ந்து முதலமைச்சரை பதவி கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட அவை தலைவர் தலைமையிலான முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர்,கல்வி அமைச்சரது படங்கள் அலுவலகங்களில் தொங்கவிடப்பட்டுள்ளதாக புதிய புகார் எழுப்பப்பட்டதுடன் அது தொடர்பில் ஆளுநருக்கு முறையிடப்பட்டுமிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments