மதில் பாய்ந்து ரெலோ அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள்


யாழ்.நல்லுாா் ஆலய வீதியில் உள்ள ரெலோ கட்சியின் அலுவலகத்திற்குள் இனந்தொியாத நபா்கள் சிலா் நுழைந்ததாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரெலோ கட்சியின் அமைப்பாளர் இன்று செவ்வாய்க்கிழமை) இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம், கோவில் வீதியில் அமைந்துள்ள ரெலோ கட்சியின் அலுவலகத்திற்குள்

நேற்று இரவு இனந்தெரியாத 3 பேர் மதில் பாய்ந்து உள்நுழைந்ததாக அலுவலகத்தின் அருகாமையில் உள்ள சின்மயா மிஷனில் இருப்பவர்கள் கண்டு கட்சி உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இருந்தபோதிலும் யாரும் அடையாளம் காணப்படாத அதேவேளை அலுவலகத்திற்கு எந்தவிதமான சேதங்களும் விளைக்கப்பட்டதாக அடையாளப்படுத்தப்படவில்லை.

ரெலோ கட்சியின் முறைப்பாட்டைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து, ரெலோ அமைப்பின் முக்கிய தலைவரான எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments